பென் ஸ்டோக்ஸ் படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

பும்ரா இல்லாதது இந்தியாவின் பிரச்னை; இங்கிலாந்தின் பிரச்னையல்ல: பென் ஸ்டோக்ஸ்

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசியுள்ளார்.

DIN

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 2) முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

வெற்றி கணக்கைத் தொடங்கும் முனைப்பில் ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணியும், வெற்றியைத் தொடரும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் உள்ளன. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது.

பென் ஸ்டோக்ஸ் கூறுவதென்ன?

இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கும் நிலையில், டெஸ்ட் தொடர் முழுவதும் ஜஸ்பிரித் பும்ரா விளையாடமாட்டார் என்பது இந்திய அணியின் பிரச்னை என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த டெஸ்ட் தொடர் முழுவதும் ஜஸ்பிரித் பும்ரா விளையாடமாட்டார் என்பது இந்திய அணியின் பிரச்னை. அதனை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நான் இங்கிலாந்து அணியின் கேப்டன். இந்திய அணி மிகவும் சிறந்த அணி. அவர்கள் எப்போதும் சவாலளிக்கும் விதமாக விளையாடுவார்கள். அவர்களை எளிதாக வீழ்த்திவிடலாம் என நினைக்கவில்லை.

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ரிஷப் பந்த் விளையாடும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மிகவும் திறமை வாய்ந்த வீரர். அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் என்ன நடக்கும் என்பதை கடந்த வாரம் பார்த்திருப்போம். முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசி அசத்தினார். அவர் மிகவும் அபாயகரமான வீரர் என்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோதே, ஜஸ்பிரித் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

England captain Ben Stokes on Tuesday dismissed the chatter surrounding Jasprit Bumrah's availability for only three Tests out of five as India's problem.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

SCROLL FOR NEXT