சதம் விளாசிய மகிழ்ச்சியில் குசல் மெண்டிஸ் படம் | இலங்கை கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

சதம் விளாசிய குசல் மெண்டிஸ்; வங்கதேசத்துக்கு 286 ரன்கள் இலக்கு!

வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் எடுத்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 8) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசல் மெண்டிஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 114 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 18 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, சரித் அசலங்கா 58 ரன்களும், பதும் நிசங்கா 35 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

வங்கதேசம் தரப்பில் டஸ்கின் அகமது மற்றும் மெஹிதி ஹாசன் மிராஸ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். தன்சிம் ஹாசன் சாகிப், தன்விர் இஸ்லாம் மற்றும் ஷாமிம் ஹொசைன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி களமிறங்குகிறது.

Batting first in the third ODI against Bangladesh, Sri Lanka scored 285 runs for the loss of 7 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்ளை நிலா... ஐஸ்வர்யா ராஜேஷ்

அயோத்தி கோயில் கொடியேற்ற விழா! குடியரசுத் தலைவர், பிரதமர் பங்கேற்பு!

விழிகளில் வழிந்திடும் அழகு... குஹாசினி

ராகுல் காந்தியின் பேரணியில் இணைகிறது திரிணமூல் காங்கிரஸ்!

குளத்தில் மூழ்கி சுங்கத்துறை பணியாளா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT