ஆர்சிபி அணியினர். 
கிரிக்கெட்

ஆர்சிபி வீரர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு!

ஆர்சிபி வீரர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகாரளித்துள்ளார்.

ஆர்சிபி அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயாள் மீது பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த அந்தப் பெண் அளித்துள்ள புகாரில், யஷ் தயாள் அவரை உடல் ரீதியாகவும், மன ரீதியிலும் துன்புறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகார் கடந்த ஜூன் 21 ஆம் தேதி முதல்வரின் குறைதீர்வு இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், பிஎன்எஸ் பிரிவு 69 கீழ் திருமணம் ஆசை கூறி ஏமாற்றியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து யஷ் தயாள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

புகாரளித்தப் பெண்ணுடன் யஷ் தயாள்.

ஒருவேளை யாஷ் தயாள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அந்தப் பெண் கூறும்போது, “திருமணத்தைக் காரணம் காட்டி, யஷ் தயாள், என்னுடன் பலமுறை தனிமையில் இருந்துள்ளார். அவரது குடும்பத்தினரிடமும் என்னை அறிமுகப்படுத்தினார். அவர்களிடம் நான் அவர்களின் மருமகள் என்று கூறினர்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால், தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும், அதற்காகச் சிகிச்சை பெறுவதாகவும் அந்தப் பெண் காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்லுவதில் முக்கிய பங்காற்றியவர்களில் யஷ் தயாளும் ஒருவர். இவர் உத்தரப் பிரதேச அணிக்காவும், இந்தியா ஏ, பி அணிகளுக்காவும் விளையாடி வருகிறார். மிகவும் பிரபலமான வீரர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Yash Dayal booked in sexual harassment case after Ghaziabad woman’s complaint

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப். 1 முதல் புதிய கட்டணம் அமல்

பயங்கரவாத அமைப்புகளின் மனித ஜிபிஎஸ் சுட்டுக் கொலை!

இன்பமே உந்தன் பேர் பெண்மையோ... டெல்னா டேவிஸ்!

ஆசிய கோப்பையைப் புறக்கணித்த பாகிஸ்தான் தமிழ்நாட்டிற்கு வர ஒப்புதல்!

அழகு பட்டாம்பூச்சி... கௌரி கிஷன்!

SCROLL FOR NEXT