ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய நிதீஷ் குமார்; இங்கிலாந்து நிதானம்!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 83 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் இன்று (ஜூலை 10) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள்
Advertisement
Advertisement
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஸாக் கிராலி மற்றும் பென் டக்கெட் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இருப்பினும், பென் டக்கெட் 23 ரன்களிலும், ஸாக் கிராலி 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இவர்கள் இருவரின் விக்கெட்டினையும் நிதீஷ் குமார் ரெட்டி அவர் வீசிய முதல் ஓவரிலேயே வீழ்த்தினார். பென் டக்கெட் மற்றும் ஸாக் கிராலி இருவரும் ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர்.
உணவு இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 24 ரன்களுடனும், ஆலி போப் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
England were 83 for 2 in their first innings at the lunch break of the third Test against India.