படம் | AP
கிரிக்கெட்

இந்திய அணியில் நிதீஷ் குமார் தொடர்ந்து இடம்பெற வேண்டும்: அனில் கும்ப்ளே

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் நிதீஷ் குமார் ரெட்டி தொடர்ந்து இடம்பெற வேண்டும்.

இணையதளச் செய்திப் பிரிவு

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டரான நிதீஷ் குமார் ரெட்டி தொடர்ந்து இடம்பெற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்தியா தரப்பில் நிதீஷ் குமார் ரெட்டி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

அனில் கும்ப்ளே கூறுவதென்ன?

ஒரே ஓவரில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரின் விக்கெட்டினையும் வீழ்த்திய நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறுவதற்கு தகுதியான நபர் என்பதை நிதீஷ் குமார் ரெட்டி நிரூபித்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நிதீஷ் குமார் ரெட்டி மிகவும் சிறப்பாக பந்துவீசியதைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன். அவர் தொடர்ச்சியாக சரியான பகுதியில் பந்துவீசுகிறார். அவர் மிகவும் நேர்த்தியாக பந்துவீசுகிறார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் தொடரில் அவர் நன்றாக செயல்பட்டதாக நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவில் சதம் விளாசினார். விக்கெட்டுகள் அதிகம் எடுக்காவிட்டாலும், பந்துவீச்சில் தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முயற்சித்தார்.

ஒரு ஸ்பெல்லுக்கு அவர் கிட்டத்தட்ட 14 ஓவர்கள் வீசுகிறார். அது அவருடைய உடற்தகுதியையும், பந்துவீச்சு கட்டுப்பாட்டையும் வெளிக்காட்டுகிறது. அவர் இளம் வீரர். சதம் அடிக்கும் திறன் கொண்டவர். மிகவும் நன்றாக ஃபீல்டிங் செய்யக்கூடியவர். அவர் தொடர்ச்சியாக அணியில் இடம்பெற்று விளையாட வேண்டும் என்றார்.

இந்திய அணிக்காக இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிதீஷ் குமார் ரெட்டி, 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Former Indian captain Anil Kumble has said that all-rounder Nitish Kumar Reddy should continue to be included in the Indian Test team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளமை வானிலே... பார்த்திபா!

அன்பின் நிமித்தம்... ராஷி சிங்!

அழகும் அமுதும்! - ஜெனிலியா

அழகிய நதி... மாளவிகா மோகனன்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சுதர்ஷன் ரெட்டிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் முழு ஆதரவு!

SCROLL FOR NEXT