ஆஸ்திரேலிய வீரர்கள்.  படம்: ஏபி
கிரிக்கெட்

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம்: டாப் 10-இல் 5 ஆஸி. வீரர்கள்!

டெஸ்ட் தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸி. வீரர்கள் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் விதமாக டாப் 10இல் 5 ஆஸி. வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கிரிக்கெட் உலகில் அதிகமான உலகக் கோப்பைகளை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளிலும் அசத்தி வருகிறது.

கடந்த 2021- 23 சீசன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற ஆஸி. சமீபத்தில் 2023-25 சீசனில் தென்னாப்பிரிக்காவிடம் இறுதிப் போட்டியில் தோற்றது.

தற்போது, மேற்கிந்தியத் தீவுகளுடன் உடனான டெஸ்ட் தொடரில் 3-0 என அபாரமாக வென்றது.

குறிப்பாக, கடைசி டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. அதில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை கடைசி இன்னிங்ஸில் 27 ரன்களுக்கு சுருட்டி ஆதிக்கம் செலுத்தியது.

இந்நிலையில், ஐசிசி தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஆஸ்திரேலியாவின் 5 பந்துவீச்சாளர்கள் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் டாப் 10-க்குள் இடம் பிடித்துள்ளார்கள்.

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை

1. ஜஸ்ப்ரீத் பும்ரா - 901 புள்ளிகள் (இந்தியா)

2. ககிசோ ரபாடா - 851 புள்ளிகள் (தென்னாப்பிரிக்கா)

3. பாட் கம்மின்ஸ் - 838 புள்ளிகள் (ஆஸ்திரேலியா)

4. ஜோஷ் ஹேசில்வுட் - 815 புள்ளிகள் (ஆஸ்திரேலியா)

5. நோமன் அலி - 806 புள்ளிகள் (பாகிஸ்தான்)

6. ஸ்காட் போலண்ட் - 784 புள்ளிகள் (ஆஸ்திரேலியா)

7. மாட் ஹென்றி - 782 புள்ளிகள் (நியூசிலாந்து)

8. நாதன் லயன் - 769 புள்ளிகள் (ஆஸ்திரேலியா)

9. மார்கோ யான்சென் - 767 புள்ளிகள் (தென்னாப்பிரிக்கா)

10. மிட்செல் ஸ்டார்க் - 766 புள்ளிகள் (ஆஸ்திரேலியா)

The ICC rankings are dominated by 5 Aussie players in the top 10.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ், ஓபிஎஸ் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய செங்கோட்டையன்!

5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி: தொடரை வென்றது தெ.ஆ.!

கண்ணீருடன் தொடங்கிய மெஸ்ஸி 2 கோல்கள்: ஆர்ஜென்டீனா அபார வெற்றி!

ஆசிரியர் நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

பிரிந்தவர்களை 10 நாள்களில் இணைக்க வேண்டும்: செங்கோட்டையன் காலக்கெடு!

SCROLL FOR NEXT