இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தனது 100-ஆவது சர்வதேச போட்டியில் களமிறங்கியுள்ளார்.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருக்கிறது.
தற்போது, மான்செஸ்டரில் 4-ஆவது டெஸ்ட் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பௌலிங்கை தேர்வு செய்துள்ளது.
முகமது சிராஜ் இந்திய அணியில் முதன்முறையாக 2017-இல் டி20 போட்டிகளில் அறிமுகமானார்.
டெஸ்ட் போட்டிகளில் 2020-இல் அறிமுகமாகியுள்ள சிராஜ் 39 போட்டிகளில் விளையாடி 113 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
முகமது சிராஜ் வெள்ளைப் பந்து போட்டிகளான 44 ஒருநாள் போட்டிகளில் 77 விக்கெட்டுகளும், 16 டி20 போட்டிகளில் 16 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், தனது 31ஆவது வயதில் இந்திய அணிக்காக 100-ஆவது சர்வதேச போட்டியில் களமிறங்கியுள்ளார்.
இந்திய அணிக்காக மொத்தமாக 198 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர் பணிச் சுமையைக் காரணம் காட்டி, ஏமாற்றாமல் தொடர்ச்சியாக டெஸ்ட்டில் அபாரமாக பந்துவீசி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.