அரைசதம் அடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜோ ரூட் படம் | AP
கிரிக்கெட்

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து ஜோ ரூட் சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் படைத்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன் தினம் (ஜூலை 23) தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தற்போது, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

ஜோ ரூட் சாதனை

மான்செஸ்டர் டெஸ்ட்டின் மூன்றாம் நாளான இன்று (ஜூலை 25) இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 300 ரன்களைக் கடந்து வலுவான நிலையில் விளையாடி வருகிறது.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஸாக் கிராலி மற்றும் பென் டக்கெட் அணிக்கு மிகவும் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். ஸாக் கிராலி 84 ரன்களும், பென் டக்கெட் 94 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து, ஆலி போப் மற்றும் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்து வருகிறது. சிறப்பாக விளையாடி வரும் இருவரும் அரைசதம் கடந்தனர்.

அரைசதம் கடந்து விளையாடி வரும் ஜோ ரூட், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்களான தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டின் சாதனையை ஜோ ரூட் முறியடித்தார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்துள்ள வீரர்கள்

சச்சின் டெண்டுல்கர் - 15,921 ரன்கள்

ரிக்கி பாண்டிங் - 13,378 ரன்கள்

ஜோ ரூட் - 13,290* ரன்கள்

ஜாக் காலிஸ் - 13,289 ரன்கள்

ராகுல் டிராவிட் - 13,288 ரன்கள்

England's Joe Root has become the third highest run-scorer in Test cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரா் கல்லூரி டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

புழல் அருகே மழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவா்

டிஜிபி வினித் தேவ் வான்கடே பணியிட மாற்றம்!

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட 5 மாத சிசு

கஞ்சா விற்பனை: கேரள இளைஞா் கைது

SCROLL FOR NEXT