ஆஸி. பேட்டர் கேமரூன் கிரீன்.  படம்: ஐசிசி
கிரிக்கெட்

4-0: தொடரும் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4-ஆவது டி20 போட்டி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4-ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி. அணி டெஸ்ட் தொடரை வென்று டி20 தொடரில் விளையாடி வருகிறது.

5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என இருந்த நிலையில், இன்று 4-ஆவது போட்டி வார்னர் பார்க் திடலில் நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீ. அணி 20 ஓவர்களில் 205/9 ரன்கள் எடுத்தது.

இந்த அணியில் யாருமே அதிக ரன்கள் குவிக்காவிட்டாலும் சராசரியாக 20 ரன்கள் அடித்து 200 ரன்களை தாண்டினார்கள். அதிகபட்சமாக ரூதர்போர்டு 31 ரன்கள் எடுத்தார்.

ஆஸி. சார்பில் ஜாம்பா 3, ஆர்டி, பிராட்லெட், அப்பாட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

அடுத்து ஆடிய ஆஸி. அணி 19.2 ஓவர்களில் 206/7 ரன்கள் எடுத்து வென்றது. இந்த அணியில் கிரீன் 55, இங்லிஷ் 51, மேக்ஸ்வெல் 47 ரன்கள் குவித்தார்கள்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய 4-0 என தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடைசி டி20 போட்டி ஜூலை 29-இல் நடைபெற இருக்கிறது.

Australia won the 4th T20I against the West Indies by 3 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே பட்ஜெட்டில் மாற்றாந்தாய் மனப்பான்மை: புள்ளிவிவரங்களுடன் திமுக எம்.பி.

பிப். 17ல் இடைக்கால பட்ஜெட்! பேரவைத் தலைவர் அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பை: முதல் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவது சந்தேகம்!

சூளகிரி காவல் நிலைய வளாகத்தில் தீ விபத்து: 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்

80 நாடுகளில் ஹிந்தி மொழி வர்ணனையில் ஒளிபரப்பாகும் டி20 உலகக் கோப்பை!

SCROLL FOR NEXT