மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அரைசதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் டிம் டேவிட் பாணியில் கொண்டாடியது சமூக வலைதளத்தில் கவனம் பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி. அணி டெஸ்ட் தொடரை வென்று டி20 தொடரில் விளையாடி வருகிறது.
5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என இருந்த நிலையில், இன்று 4-ஆவது போட்டி வார்னர் பார்க் திடலில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீ. அணி 20 ஓவர்களில் 205/9 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய ஆஸி. அணி 19.2 ஓவர்களில் 206/7 ரன்கள் எடுத்து வென்றது. இந்த அணியில் கிரீன் 55, இங்லிஷ் 51, மேக்ஸ்வெல் 47 ரன்கள் குவித்தார்கள்.
இந்தப் போட்டியில் அரைசதம் அடித்த ஜோஷ் இங்லிஷ், கேமரூன் கிரீன் தங்களது வலது கையை சிங்கம் மாதிரி காண்பித்து கொண்டாடினார்கள்.
கடந்த போட்டியில் சதம் அடித்த டிம் டேவிட் இந்த பாணியை அறிமுகப்படுத்தினார்.
இங்லிஷ், கிரீனின் இந்தக் கொண்டாட்டத்தைப் பார்த்த டிம் டேவிட் உள்பட ஆஸி. வீரர்கள் ஓய்வறையில் இருந்து மிகவும் சிரித்துக்கொண்டே இருந்தார்கள்.
கடைசி டி20 போட்டி ஜூலை 29ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.