முகப்பு
கிரிக்கெட்

ஓவல் டெஸ்ட்டில் மழை குறுக்கீடு!

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழையால் தாமதமாகியுள்ளது.

Updated On : 31 ஜூலை 2025, 7:30 pm IST
- படம் | பிசிசிஐ
பகிர்:

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழையால் தாமதமாகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் இன்று (ஜூலை 31) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

உணவு இடைவேளையின்போது, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 ரன்கள் எடுத்தும், கே.எல்.ராகுல் 14 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். சாய் சுதர்சன் 25 ரன்களுடனும், கேப்டன் ஷுப்மன் கில் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Advertisement

Advertisement

மழை குறுக்கீடு

உணவுஇடைவேளை நிறைவடைந்து போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மழை விடுவதும், பின்பு தொடர்வதும் என போட்டியை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மழை நின்று விரைவில் மீண்டும் போட்டி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி தற்போது 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.