அலீசா | ஹர்மன்பிரீத் | சமாரி அத்தப்பட்டு 
கிரிக்கெட்

இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை! 12 ஆண்டுகளுக்குப் பின்..!

இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கவுள்ளதைப் பற்றி...

DIN

மகளிருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளதை ஐசிசி அதிகாரபூர்வமாக உறுதிசெய்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட 8 நாடுகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன.

இந்தத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் என்றும் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெங்களூரு, குவாஹாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலும் பாகிஸ்தானுக்கான போட்டிகள் இலங்கை தலைநகரான கொழும்புவிலும் நடைபெறவுள்ளன.

சாம்பியன்ஸ் டிராபியின் போது ஏற்பட்ட பிரச்சினை மற்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் ஒப்பந்தம் காரணமாக இரு நாடுகளுக்கும் பொதுவான மைதானமாக கொழும்பு மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

12 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை நடைபெறுகிறது. பெங்களூருவில் கோலாகலமாகத் தொடங்கும் தொடருக்கான முதல் போட்டியில் இந்திய மகளிரணி விளையாடுகிறது.

அக்டோபர் 29 ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டி குவாஹாத்தி அல்லது கொழும்புவில் நடைபெறுகிறது. அதேபோன்று, நவம்பர் 2 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானம் அல்லது கொழும்புவில் நடைபெறவுள்ளது.

இந்திய அணி முதல் கோப்பைக்கான தேடலில் களமிறங்கியுள்ளது. அதேவேளையில், ஆஸ்திரேலிய இதுவரை 7 கோப்பைகளை வென்றுள்ளது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிக்க: ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் வாக்குரிமைப் பேரணி தொடக்கம்: மூவண்ணக் கொடியசைத்து ஆரவாரம்!

பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி? ராமதாஸ் உறுதி!

ஆடி போனா ஆவணி... அனசுயா!

தீபாவளிக்கு இரட்டை போனஸ் காத்திருக்கிறது: பிரதமர் மோடி

பாமக பொதுக்குழு! அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

SCROLL FOR NEXT