கௌதம் கம்பீர். 
கிரிக்கெட்

வெற்றிக்காகப் பேரணி நடத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லை! - கம்பீர்

வெற்றிக்காகப் பேரணி நடத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லை என கௌதம் கம்பீர் கூறியுள்ளதைப் பற்றி...

DIN

வெற்றிக்காகப் பேரணி நடத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்து செல்வதற்கு முன்னதாக மும்பையில் உள்ள பிசிசிஐ-யில் தலைமை அலுவலகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும், இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இருவரும் இன்று(ஜூன் 6) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சின்னசாமி மைதானம் அருகே 11 ரசிகர்கள் உயிரிழந்தது குறித்து கம்பீரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

செய்தியாளர்களிடம் கௌதம் கம்பீர் பேசுகையில், “விளையாட்டில் வெற்றிப் பெற்றதற்கு பேரணி நடத்துவது அவசியமானதல்ல. குடிமக்கள் அனைவரும் பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், இதுபோன்ற விழாக்களை நடத்தக் கூடாது. வெற்றிக்காக பேரணி நடத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லை” என்றார்.

இதையும் படிக்க: கூட்ட நெரிசல் விவகாரம்: ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயக்கம் என்ன... திஷா பதானி!

ஆட்டம் போடு... குஷி தூபே!

சத்தீஸ்கரில் காவல் நிலைய வளாகத்தில் காவல் அதிகாரி தற்கொலை

சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தகுதிக்கு மீறி கொண்டாடப்படும் இயக்குநர்... விமர்சனத்திற்கு ஆளாகும் லோகேஷ் கனகராஜ்!

SCROLL FOR NEXT