விராட் கோலி ஏபி
கிரிக்கெட்

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவார்: மைக்கேல் கிளார்க்

ஆஸி. முன்னாள் கேப்டன் கிளார்க் இந்திய வீரர் விராட் கோலி குறித்து கூறியதாவது...

DIN

ஆஸி. முன்னாள் கேப்டன் கிளார்க், “ டெஸ்ட் கிரிக்கெட்டை உயர்வாக நினைக்கும் விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவார்” எனக் கூறியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிஜிடி தொடரில் மோசமாக விளையாடியதைத் தொடர்ந்து, விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

சச்சின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

123 டெஸ்ட்டில் 9,230 ரன்கள் குவித்துள்ள கோலி அதில் 30 சதங்களை அடித்துள்ளார்.

பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் மைகேல் கிளார்க் பேசியதாவது:

இங்கிலாந்துடன் இந்தியா 0-5 என தோல்வியுற்றால், ரசிகர்களே விராட் கோலியை அழைத்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுங்கள் எனக் கூறுவார்கள்.

கோலிக்கு டெஸ்ட் கிரிக்கெட் இப்போதும் பிடிக்கும். டெஸ்ட் கிரிக்கெட்தான் உண்மையானது என அவர் கூறும் வார்த்தைகளில் அவரது ஆர்வத்தைப் பார்க்கலாம்.

டெஸ்ட் கிரிக்கெட்டை விராட் கோலி உச்சமென நினைக்கிறார். இப்போதும் நன்றாகவே விளையாடுகிறார்.

கோலி, ரோஹித் இல்லாமலே இந்திய அணி இங்கிலாந்தில் வெல்லும். ஒருவேளை 0-5 என தோற்றால் விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவார் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1,751 கிலோ தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்: 7 போ் கைது

வாக்கு திருட்டு வெற்றிபெற அனுமதிக்க மாட்டோம்: தேவேந்தா் யாதவ் உறுதி

நூதன மோசடி: நூஹ் பகுதியைச் சோ்ந்த ஒருவா் கைது

போதைப்பொருள் வழக்கில் தென்னாப்பிரிக்க நாட்டவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

மழைவெள்ள நீரில் மூழ்கி இறந்தவரின் குடும்பத்தினரை சந்தித்த ஆம் ஆத்மி குழு!

SCROLL FOR NEXT