எம்.எஸ்.தோனி படம் | ஐபிஎல்
கிரிக்கெட்

ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பெற்ற எம்.எஸ்.தோனி!

ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம்பெற்றுள்ளார்.

DIN

ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம்பெற்றுள்ளார்.

லெஜண்டரி வீரர்களுடன் ஒருநாள் என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஐசிசி சார்பில் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றுள்ள வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் இன்று (ஜூன் 9) அறிவிக்கப்பட்டது.

ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமில் இன்று அறிவிக்கப்பட்ட 7 பேரில் 5 ஆடவர், 2 மகளிர் அடங்குவர். இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றுள்ள 11-வது இந்திய வீரர் என்ற பெருமை அவரைச் சேரும்.

ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றது குறித்து எம்.எஸ்.தோனி பேசியதாவது: உலகில் உள்ள அனைத்து நாடுகளிலிருந்தும் கிரிக்கெட்டுக்காக தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ள கிரிக்கெட் வீரர்களை ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெறச் செய்து அவர்களை ஐசிசி கௌரவிக்கிறது. ஹால் ஆஃப் ஃபேமில் பல தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடன் என்னுடைய பெயரும் இனி நினைவில் வைத்துக் கொள்ளப்படும் என்பது சிறப்பான உணர்வைத் தருகிறது. இந்த சிறப்பான தருணத்தை நினைத்து நான் எப்போதும் மகிழ்ச்சியடைவேன் என்றார்.

ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமில் எம்.எஸ்.தோனி மட்டுமின்றி, மேத்யூ ஹைடன், டேனியல் வெட்டோரி, ஹாசிம் ஆம்லா, கிரீம் ஸ்மித், சனா மிர் மற்றும் சாரா டெய்லர் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT