ஆஸ்திரேலிய அணி.  படம்: ஐசிசி
கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பிளேயிங் லெவனை அறிவித்த ஆஸ்திரேலியா!

டபிள்யூடிசி இறுதிப் போட்டிக்கான ஆஸி. பிளேயிங் லெவன் குறித்து...

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான (டபிள்யூடிசி) பிளேயிங் லெவனை ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் அறிவித்துள்ளார்.

டபிள்யூடிசியின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் தென்னாபிரிக்காவும் நாளை (ஜூன் 11) லண்டனில் மோதுகிறது.

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா கோப்பையை தக்கவைக்கும் முனைப்பில் போராடி வருகிறது.

இரண்டு ஆல்ரவுண்டர்களுடன் ஆஸி. அணி களமிறங்கியுள்ளது. சுழல் பந்தில் நாதன் லயனுடன் களமிறங்கியது.

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.

தொடக்க வீரர் சாம் கான்ஸ்டாஸ் தேர்வாகவில்லை. அதேபோல் பிஜிடி தொடரில் சிறப்பாக பந்துவீசிய ஸ்காட் போலாண்டும் பிளேயிங் லெவனில் தேர்வாகாதது குறிப்பிடத்தக்கது.

கேமரூன் கிரீன், ஹேசில்வுட் காயத்துக்குப் பிறகு மீண்டும் அணியில் இணைந்துள்ளார்கள்.

ஐபிஎல் தொடரில் அசத்திய இங்லீஷும் தேர்வாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனிநபர் கடன் தருவதாகக் கூறி மோசடி! எச்சரிக்கையாக இருங்கள்!!

கோயில் குடமுழுக்குக்காக சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய இஸ்லாமியா்கள்

நாளை குருநானக் ஜெயந்தி! பங்குச் சந்தைகள் செயல்படுமா?

மோசமான நிலையில் காற்றின் தரம்! திணறும் மக்கள்!

மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT