குழந்தைகளுடன் சேர்ந்து லபுஷேனிடம் கையெழுத்து வாங்கிய ஏபிடி வில்லியர்ஸ். படங்கள்: ஐசிசி
கிரிக்கெட்

குழந்தைகளுடன் சேர்ந்து லபுஷேனிடம் கையெழுத்து வாங்கிய ஏபிடி வில்லியர்ஸ்..!

ஏபிடி வில்லியர்ஸ் தனது குழந்தைகளுடன் மார்னஸ் லபுஷேனிடம் கையெழுத்து வாங்கியது குறித்து...

DIN

ஏபிடி வில்லியர்ஸ் தனது குழந்தைகளுடன் மார்னஸ் லபுஷேனிடம் கையெழுத்து வாங்கிய விடியோ வைரலாகியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியைப் பார்க்க பல முன்னாள் கிரிக்கெட்டர்களும் வந்துள்ளார்கள். கேன் வில்லியம்சனும் போட்டியை பார்த்து வருகிறார்.

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் இந்தப் போட்டிக்கான வர்ணனையாளராக லண்டன் சென்றுள்ளார். இவருடன் அவரது குழந்தைகளும் போட்டியைப் பார்க்கச் சென்றுள்ளனர்.

ஏபிடி தனது குழந்தைகளுடன் சேர்ந்து வரிசையில் நின்று ஆஸி. வீரர் மார்னஸ் லபுஷேனிடம் ஜெர்ஸியில் கையெழுத்து வாங்கியது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

இந்த விடியோவைப் பகிரும் ரசிகர்கள், “இதுதான் ஏபிடியின் பெருந்தன்மை” எனப் புகழ்ந்து வருகிறார்கள்.

இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மாரனஸ் லபுஷேன் தற்போது முதல்முறையாக தொடக்க வீரராக களமிறங்கியுள்ளார்.

டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் 2ஆம் நாளான இன்று தென்னாப்பிரிக்க அணி விக்கெட் எதுவும் விழாமல் நன்றாக விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிம்மத்துக்கு குழப்பம் நீங்கும்: தினப்பலன்கள்!

தில்லியில் போலி கொள்ளை: லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது! ரூ.55 லட்சம் செப்பு கம்பிகள் மீட்பு!

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,302 வழக்குகளுக்குத் தீா்வு

சீரான குடிநீா் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்

ஆக்கிரமிப்பால் ஓடைபோல மாறிய செய்யாறு!

SCROLL FOR NEXT