செய்தியாளர் சந்திப்பில் ஸ்டீவ் ஸ்மித். (உள்படம்: ஸ்மித் ஆட்டமிழந்த விதம்)  படங்கள்: ஐசிசி
கிரிக்கெட்

டபிள்யூடிசி: முதல் இன்னிங்ஸில் கற்றுக்கொண்ட பாடம் என்ன? ஸ்டீவ் ஸ்மித் பதில்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் இன்னிங்ஸில் கற்றுக்கொண்ட பாடம் குறித்து ஸ்மித் பேசியதாவது...

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் தான் கற்றுக்கொண்ட பாடம் குறித்து பேசியுள்ளார்.

டபிள்யூடிசி இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 212-க்கு ஆல் அவுட்டானது.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களில் தெ.ஆ. அணியின் எய்டன் மார்க்ரம் ஓவரில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

டெஸ்ட்டில் 10,000 ரன்களை கடந்த ஸ்மித் ஒரு பார்ட் டைம் (பகுதி நேர) சுழல்பந்து வீச்சாளருக்கு ஆட்டமிழந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ஸ்மித் கூறியதாவது:

ஒரு பகுதி நேர சுழல் பந்துவீச்சாளரிடம் எட்ஜ் கொடுக்கக் கூடாது. (சிரிக்கிறார்). இதை எப்படி செய்தேன் என நான் இன்னமும் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.

மீண்டும் அதைச் செய்யக்கூடாது. அடுத்த எங்கள் கையில் என்ன இருக்கிறதோ (2-ஆவது இன்னிங்ஸை குறிப்பிடுகிறார்) அதைச் சரியாக செய்ய வேண்டும் என்றார்.

லார்ட்ஸ் திடலில் வெளிநாட்டு வீரர் ஒருவர் அதிகமான ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்துக்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!

வருவாய்த் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு!

பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோ மீண்டும் இணையதளங்களில் எவ்வாறு பரவுகிறது?: உயா்நீதிமன்றம் கேள்வி

சங்கா் ஜிவால் இன்று ஓய்வு! புதிய டிஜிபி யார்?

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கி விபத்து

SCROLL FOR NEXT