FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஒரே போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அசத்திவரும் பாட் கம்மின்ஸ் குறித்து...

Updated On : 13 ஜூன் 2025, 2:18 pm IST
பாட் கம்மின்ஸ் - படம்: ஏபி
பகிர்:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பாட் கம்மின்ஸ் தனது 14-ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இத்துடன் குறைந்த பந்துகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் ஜூன்.11 முதல் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸில் ஆஸி. 212க்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் ஆஸி. அணி 2ஆம் நாள் முடிவில் 144க்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

கம்மின்ஸ் படைத்த சாதனைகள்

1. ஐசிசி இறுதிப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள்

2. லார்ட்ஸ் திடலில் அதிக விக்கெட்டுகள் எடுத்த கேப்டன்

3. 300 டெஸ்ட் விக்கெட்டுகள்

4. குறைவான பந்துகளில் 300 டெஸ்ட் விக்கெட்டுகள் (5ஆவது வீரர்)

5. 14-ஆவது 5 விக்கெட்டுகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments