சதமடித்த மகிழ்ச்சியில் எய்டன் மார்க்ரம்.  படம்: ஏபி
கிரிக்கெட்

லயனிடம் ஆட்டமிழக்காத ஒரே வீரர் மார்க்ரம்..! ஐசிசி கோப்பையை வாங்கித்தரும் நாயகன்!

தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் அசத்தல் பேட்டிங் குறித்து...

DIN

தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் டெஸ்ட்டில் நாதன் லயனிடம் ஆட்டமிழக்காத ஒரே வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருக்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் ஜூன்.11 முதல் நடைபெற்று வருகிறது. தற்போது, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் ஆஸி. 212க்கு ஆட்டமிழக்க, தெ.ஆ. 138க்கு ஆட்டமிழந்தது.

இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸி. 207க்கு ஆட்டமிழந்தது. 282 ரன்கள் தேவை என்ற நிலையில் தெ.ஆ. 3ஆம் நாள் முடிவில் 213/2 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த 2ஆவது இன்னிங்ஸில் கேப்டன் பவுமா கால் வலியிலும் 65 ரன்களுடன் சிறப்பாக ஆடி வருகிறார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு ஐசிசி கோப்பையை வாங்கித்தரும் நோக்கில் எய்டன் மார்க்ரம் சதமடித்து நாயகனாக மாறியுள்ளார்.

ஆஸி. பந்துவீச்சில் தடுமாறாமல் விளையாடுகிறார். குறிப்பாக, நாதன் லயனுக்கு எதிராக 200 பந்துகள் விளையாடிய 50 பேட்டர்களில் ஆட்டமிழக்காத ஒரே வீராரக எய்டன் மார்க்ரம் மாறியுள்ளார்.

159 பந்துகளில் 102 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். ஆட்ட நாயகன் விருதையும் வாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை வெல்லும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணி இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT