படம் | ஐசிசி
கிரிக்கெட்

வெற்றியை நோக்கிப் பயணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு முன்னாள் கேப்டன் பாராட்டு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றியை நோக்கிப் பயணிக்கும் தென்னாப்பிரிக்க அணியை அந்த அணியின் முன்னாள் கேப்டன் பாராட்டியுள்ளார்.

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றியை நோக்கிப் பயணிக்கும் தென்னாப்பிரிக்க அணியை அந்த அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் பாராட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வருகிறது. 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்திருந்தது. அய்டன் மார்க்ரம் 102 ரன்களுடனும், டெம்பா பவுமா 65 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு இன்னும் 69 ரன்களே தேவைப்படுகின்றன.

முன்னாள் கேப்டன் பாராட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றிக்கு அருகில் வந்துள்ள நிலையில், தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக போராடி மீண்டும் ஆட்டத்துக்குள் வந்துள்ளதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கேப்டன் டெம்பா பவுமா தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தால், அது நாட்டில் மீண்டும் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை அதிகரிக்க உதவும் என நினைக்கிறேன். இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளது. தனது போராட்ட குணத்தினால் தென்னாப்பிரிக்க அணி மீண்டும் ஆட்டத்துக்குள் வந்தது. பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள்.

அய்டன் மார்க்ரமின் ஆட்டம் அபாரமாக இருந்தது. மார்க்ரமுடன் கேப்டன் டெம்பா பவுமா பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. டெம்பா பவுமா வலியையும் பொருட்படுத்தாமல் நாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து விளையாடி வருகிறார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளியானது இந்திரா படத்தின் முதல் பாடல்!

கலகக்காரி... கௌரி கிஷன்!

கம்பனில் திருக்குறள்

செவ்விந்தியர்கள் குருதிப் புனலோட்டம்

அல்லூரி சீதாராம ராஜு

SCROLL FOR NEXT