சித்தார்த் கௌலுடன் (நடுவில்), விராட் கோலி(இடது), கே.எல். ராகுல் (வலது). 
கிரிக்கெட்

பிக்-பாஸ் தொடரில் விளையாட பதிவு செய்த இந்திய வீரர்!

பிக்-பாஸ் கிரிக்கெட் தொடரில் விளையாட பதிவு செய்த இந்திய வீரரைப் பற்றி...

DIN

ஆஸ்திரேலியாவில் பிரபலமான லீக் தொடரான பிக்-பாஸ் தொடரில் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவரும் பதிவு செய்துள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் போலவே உலகம் முழுவதும் பல்வேறு லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் போன்று ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்-பாஸ் லீக் உலகெங்கும் மிகவும் பிரபலமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தத் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவைச் சேர்ந்த 15 பெண் வீராங்கனைகள் உள்பட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கௌலும் பதிவு செய்திருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற சித்தார்த், இந்திய அணிக்காக மூன்று ஒருநாள் போட்டிகளிலும், பல்வேறு டி20-களிலும் விளையாடியிருக்கிறார். பிக்-பாக் அணிகளில் இவர் தேர்தெடுக்கப்பட்டால், பிபிஎல்லில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற சிறப்பையும் பெறுவார்.

இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்பட 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தத் தொடருக்கான அணிகளில் பதிவு செய்திருக்கின்றனர். ஒருவேளை 43 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடும் பட்சத்தில் அவர், பிக்பாஸ் தொடரில் விளையாடிய மிகவும் வயதான வீரர் என்ற சிறப்பையும் பெறுவார்.

இந்திய வீராங்கனைகளில் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷிகா பாண்டே, ராதா யாதவ் மற்றும் யஸ்திகா பாட்டியா ஆகியோர் ஏற்கனவே பிபிஎல் தொடரில் விளையாடியுள்ளனர்.

அவர்களைத் தவிர்த்து எஸ். மேக்னா, அருந்ததி ரெட்டி, பிரதிகா ராவல், 19-வயதுக்குள்பட்ட டி20 உலகக் கோப்பையை வென்ற கேப்டன் நிகி பிரசாத், உமா சேத்ரி, காஷ்வி கௌதம், பிரியா மிஸ்ரா, இன்னும் சிலரும் 15 பேர் கொண்ட பட்டியலில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT