ஸ்டீவ் ஸ்மித் படம்: ஏபி
கிரிக்கெட்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்: ஃபீல்டிங்கில் முதலிடம் பிடித்த ஸ்டீவ் ஸ்மித்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அசத்திய ஸ்டீவ் ஸ்மித் குறித்து...

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஸ்டீவ் ஸ்மித் ஃபீல்டிங்கில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் (36 வயது) 117 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10,350 ரன்களை குவித்துள்ளார். அதில் 36 சதங்கள், 42 அரைசதங்கள் அடித்துள்ளார்.

பேட்டிங்கில் மட்டுமில்லாமல் ஃபீல்டிங்கிலும் அசத்தும் ஸ்டீவ் ஸ்மித் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 தொடரில் அதிக கேட்ச்சுகள் பிடித்து அசத்தியுள்ளார்.

மொத்தமாக டெஸ்ட்டில் 200 கேட்ச்சுகளை பிடித்துள்ளார். இந்த டபிள்யூடிசி எடிசனிலும் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த டபிள்யூடிசியிலும் சேர்த்து ஸ்டீவ் ஸ்மித் 104 கேட்ச்சுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25-இல் அதிக கேட்ச்சுகள்

1. ஸ்டீவ் ஸ்மித் - 43

2. ஜோ ரூட் - 35

3. டேரில் மிட்செல் - 24

4. பென் டக்கெட் - 23

5. ஹாரி புரூக் - 21

6. மார்க்ரம் - 20

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கேட்ச் பிடிக்க முயலும்போது கை விரலில் காயம் ஏற்பட்டு வெளியேறினார். அந்த கேட்சை பிடித்திருந்தால் ஆட்டமே மாறியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்கா கோப்பையை வென்று அசத்தியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்கள் முழுவதும் அதிக கேட்ச்சுகள்

1. ஸ்டீவ் ஸ்மித் - 104 (ஆஸி.)

2. ஜோ ரூட் - 100 (இங்கிலாந்து)

3. பென் ஸ்டோக்ஸ் - 54 (இங்கிலாந்து)

4. ஜாக் கிராவ்லி - 53 (இங்கிலாந்து)

5. டி சில்வா - 50 (இலங்கை)

6. விராட் கோலி - 49 (இந்தியா)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆட்சியா் ஆய்வு

பல்கலை. கபடி: மேலவாசல் கல்லூரிக்குப் பாராட்டு

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

காயமடைந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT