பிபிஎல் சேலஞ்சர் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 20 ஓவர்களில் 198/8 ரன்கள் குவித்துள்ளது.
இந்த அணியின் தொடக்க வீரர் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.
நாக் அவுட்டில் வென்ற ஹோபர்ட் ஹாரிகேன்ஸ் அணி சேலஞ்சர் ஆட்டத்தில் டாஸ் வென்று, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக ஸ்டீவ் ஸ்மித், டேனியல் ஹுக்ஸ் களமிறங்கினார்கள். அதிரடியாக அரைசதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித் 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஜோயல் டேவிஸ், ஹென்ட்ரிக்ஸ், லாச்லன் ஷா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.
ஹோபர்ட் ஹாரிகேன்ஸ் அணியின் சார்பில் ரைலி மெரிடித் 3 விக்கெட்டுகள், பில்லி ஸ்டான்லேக், ரிஷாத் ஹைசைன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.