கருண் நாயர் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

8 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வாரா கருண் நாயர்?

இந்திய அணி வீரர் கருண் நாயர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார்.

DIN

இந்திய அணி வீரர் கருண் நாயர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் திடலில் இன்று (ஜூன் 20) தொடங்கியது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுக வீரராக இடம் பெற்றார். பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ள கருண் நாயர் 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்திய அணிக்காக விளையாடவுள்ளார்.

வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வாரா?

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் கருண் நாயர் அறிமுகமானார். அவர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமை அவரைச் சேரும். அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு கடைசியாக இந்திய அணிக்காக விளையாடி இருந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் கருண் நாயர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்த அவருக்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்ற கருத்துகளை பலரும் முன்வைத்தனர். இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கருண் நாயர் சேர்க்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அணியிலும் சேர்க்கப்பட்டார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்ட கருண் நாயர், முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்காக விளையாடவுள்ளது குறித்து கருண் நாயர் பேசியதாவது: வாழ்க்கை ஒரு முழு வட்டமாக மாறியுள்ளது. ஏனெனில், இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணியிலிருந்து வெளியேறினேன். தற்போது மீண்டும் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளேன்.

இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் போனபோது, மீண்டும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என விரும்பினேன். என்னுடைய அந்த எண்ணம் என்னை தொடர்ந்து முன்னேறச் செய்தது. தினமும் கடுமையாக பயிற்சி மேற்கொண்டேன். மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்ற என்னுடைய நம்பிக்கை உண்மையாகியுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிவியல்,பொறியியல் பட்டதாரிகளுக்கு சயின்டிஸ்ட் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

தலைவா முகத்தைப் பார்க்கணும்... ரஜினியால் ரசிகர்கள் உற்சாகம்!

நட்பு ரீதியான போட்டியில் சரமாரியாகத் தாக்கிக்கொண்ட கால்பந்து வீரர்கள்!

ரயில்வேயில் வேலை வேண்டுமா?: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு!

இப்போதும் மேக்கப் போடுவதற்கு முன் பாக்கியராஜை நினைப்பேன்: ஊர்வசி

SCROLL FOR NEXT