சதமடித்த மகிழ்ச்சியில் பல்டி அடித்த ரிஷப் பந்த்.  படம்: ஏபி
கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டின் பாக்ஸ்-ஆபிஸ் ரிஷப் பந்த்: தினேஷ் கார்த்திக்

ரிஷப் பந்த் குறித்து தினேஷ் கார்த்திக் பேசியதாவது...

DIN

முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்தினை டெஸ்ட் கிரிக்கெட்டின் பாக்ஸ்-ஆபிஸ் எனக் கூறியுள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

லீட்ஸில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ஸ்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து 2-ஆம் நாள் முடிவில் 209/3 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில், ரிஷப் பந்த் 251 பந்துகளில் 134 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 12 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

ரிஷப் பந்த் விளையாடுவதைப் பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் விளையாடுவது டெஸ்ட் கிரிக்கெட்டின் பாக்ஸ்-ஆபிஸ் போலிருக்கிறது.

ரிஷப் பந்த் திடலில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார். முற்றிலும் கணிக்கமுடியாதவர், களிப்பூட்டும் ஷாட்டுகள் ஆடுபவர்.

அவர் விளையாடுவதைப் பார்க்கும்போது அவரிடம் என்ன வேண்டுமெனக் கேட்கவே முடியாது. அவர் விரும்பியபடி தைரியமாக, துணிச்சலுடன் ஆடும் ஷாட்டுகளையே எப்போதும் விளையாடலாம்.

அன்றைய நாளில் அவர் என்ன நினைக்கிறாரோ அப்படி விளையாடலாம். அது முற்றிலும் தன்னுணர்வானது, புனிதமானது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக அமையும்: மருத்துவா் ராமதாஸ்

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: நகரப் பகுதிகளில் பொருள்கள் வழங்கல்

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,975 மெ.டன் உர மூட்டைகள்

விழுப்புரத்தில் விரைவில் அறிமுகமாகிறது தாழ்தள நகரப் பேருந்து சேவை

SCROLL FOR NEXT