முகப்பு
கிரிக்கெட்

அழுத்தத்திலிருந்து விடுபட சஞ்சு சாம்சனுக்கு ஓய்வு தேவைப்பட்டது: கௌதம் கம்பீர்

நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்குப் பிறகு அழுத்தத்திலிருந்து விடுபட சஞ்சு சாம்சனுக்கு ஓய்வு தேவைப்பட்டதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Updated On : 2 மார்ச், 2026 at 4:13 PM
வெற்றி பெற்ற மகிழ்ச்சியை பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் பகிர்ந்துகொள்ளும் சஞ்சு சாம்சன் - படம் | பிசிசிஐ
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 3:40 PM

நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்குப் பிறகு அழுத்தத்திலிருந்து விடுபட சஞ்சு சாம்சனுக்கு ஓய்வு தேவைப்பட்டதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாழ்வா சாவா ஆட்டத்தில் நேற்று (மார்ச் 1) இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொண்டது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 97 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Advertisement

Updated On : 2 மார்ச், 2026 at 4:06 PM

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்குப் பிறகு அழுத்தத்திலிருந்து விடுபட சஞ்சு சாம்சனுக்கு ஓய்வு தேவைப்பட்டதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் அவருக்கு மிகவும் கடினமானதாக அமைந்தது. அதனால், சில நேரங்களில் அவருக்கு ஓய்வளிப்பது மிகவும் முக்கியமாகத் தோன்றியது. சஞ்சு சாம்சனின் திறமை எங்களுக்கு எப்போதும் தெரியும். அவர் சர்வதேச டி20 போட்டிகளில் 3 சதங்கள் விளாசியுள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் நிறைய வீரர்கள் 3 சதங்கள் விளாசியதில்லை.

உலகக் கோப்பைத் தொடரில் எங்களுக்கு எப்போது அவருடைய உதவி தேவைப்படுகிறதோ அப்போது அவர் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றி பெற்றுத் தருவார் என்பது எங்களுக்குத் தெரியும். சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் அவர் சிறப்பாக விளையாடினார். அந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கம் கிடைத்தது. இன்று மீண்டும் அதிரடியாக விளையாடி சிறப்பாக ரன்கள் குவித்துள்ளார். தொடர்ச்சியாக சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

Updated On : 2 மார்ச், 2026 at 4:06 PM

அவர் ஆட்டத்தை அதிரடியாக எடுத்துச் செல்லவில்லை. அவர் மிகவும் அமைதியாக நேர்த்தியான கிரிக்கெட் ஷாட்டுகளை மட்டுமே விளையாடினார். அவருடைய திறமைக்கு அவர் இன்னும் அதிரடியாக விளையாடியிருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. அவர் நிறைய பந்துகளை தரையோடு செல்லுமாறு அடித்தார். நிறைய இரண்டு ரன்கள் எடுத்தார்.

சஞ்சு சாம்சன் உலகத் தரத்திலான வீரர் என்பதை நான் எப்போதும் கூறியிருக்கிறேன். அவரிடம் நிறைய திறமைகள் உள்ளன. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அவரது ஆட்டத்தைப் போன்று இன்னும் பல ஆட்டங்களை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம் என்றார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அந்த தொடரில் சஞ்சு சாம்சன் 10 ரன்கள், 6 ரன்கள், 0 ரன், 24 ரன்கள், 6 ரன்கள் எடுத்து முறையே ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

summary

India head coach Gautam Gambhir has said that Sanju Samson needed rest to relieve pressure after the series against New Zealand.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.