படம்|ஐசிசி பதிவு
கிரிக்கெட்

விக்கெட் வீழ்த்தினால் இந்தியாவுக்கு வெற்றி: இங்கிலாந்துக்கு 371 ரன்கள் இலக்கு!

2-வது இன்னிங்ஸில் இந்தியா 364 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

DIN

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நான்காவது நாளான இன்று(ஜூன் 23) இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 6 ரன்கள் முன்னிலை பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் சதம் விளாசினார். அவரைத் தொடர்ந்து, ரிஷப் பந்த்தும் சதமடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்ததன் மூலம், இந்தியா மொத்தம் 370 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இதன்மூலம், இந்தியா 370 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்டிங் செய்து 21 ரன்கள் விக்கெட் இழப்பின்றி எடுத்துள்ளது.

இன்னும் ஒரேயொரு நாள் ஆட்டம் மட்டுமே இருப்பதால் இந்த டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிவடைய வாய்ப்பு அதிகமுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை

நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி! 'வீர வணக்கம்' என முழக்கமிட்ட மு.க. ஸ்டாலின்!

ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் கேப்டன்!

தாணே: நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மருத்துவர் ஓட்டிச்சென்ற கார் மோதல்; 6 பேர் காயம்

எஸ்.ஐ. தேர்வு: திமுக அரசின் 'எங்கும் தமிழ்' என்பது வாயளவுக் கொள்கைதானா? - இபிஎஸ் கேள்வி

SCROLL FOR NEXT