ரிஷப் பந்த் படம் | AP
கிரிக்கெட்

முதல் இந்திய விக்கெட் கீப்பர்; ரிஷப் பந்த்தின் மற்றுமொரு சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

DIN

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 6 ரன்கள் முன்னிலை பெற்றது.

முதல் இந்திய விக்கெட் கீப்பர்

6 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, நான்காம் நாளில் 350 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியில் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இருவரும் சதம் விளாசி அசத்தினர். கே.எல்.ராகுல் 137 ரன்கள் எடுத்தும், ரிஷப் பந்த் 118 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

அதிரடியாக விளையாடி முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய ரிஷப் பந்த், இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம், டெஸ்ட் போட்டி ஒன்றின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய முதல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்தார்.

மேலும், இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டி ஒன்றின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய முதல் ஆசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த், முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் அதிகரிக்கும் காய்ச்சல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் - சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

சான்றிதழ்களை முறையாக பதிவேற்ற வேண்டும்: குரூப் 1 தோ்வா்களுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்

ஹரியாணா காவல் துறை ஐஜி தற்கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்

தீபாவளி பண்டிகை: 6,630 பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி

SCROLL FOR NEXT