விராட் கோலி சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்!
இந்திய டி20 வரலாற்றில் சாதனை படைத்த சூர்யகுமார் குறித்து...
இந்திய டி20 வரலாற்றில் விராட் கோலியை முந்தி சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை படைத்துள்ளார்.
அதிக ஆட்ட நாயகன் விருது வென்ற இந்தியர்களின் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் முதல் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி அமெரிக்காவுடன் மோதியது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 161/9 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் தனியாளாகப் போராடிய சூர்யகுமார் யாதவ் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அடுத்து விளையாடிய அமெரிக்க அணி 20 ஓவர்களில் 132/8 ரன்கள் எடுத்து, 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்தப் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
டி20யில் இந்தியாவுக்காக அதிக ஆட்ட நாயகன் விருதுகள்
1. சூர்யகுமார் யாதவ் - 17* (105 போட்டிகள்)
2. விராட் கோலி - 16 (125 போட்டிகள்)
3. ரோஹித் சர்மா - 14 (159 போட்டிகள்)
சமீப காலமாக ஃபார்மில் இல்லாத சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஃபார்முக்குத் திரும்பினார்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் விழுந்திருந்த நிலையில் தனி ஆளாகப் போராடி அணியின் ஸ்கோரை 161-ஆக உயர்த்தினார்.
Most potm awards for india in t20 history suryakumar yadav beat virat kohli.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.