விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஷமர் ஜோசப்.  படம்: ஏபி
கிரிக்கெட்

அப்படி என்ன வன்மம்? ஆஸி. அணிக்கு எதிராக மிரட்டும் ஷமர் ஜோசப்!

ஆஸி. அணிக்கு எதிராக மிரட்டும் மே.இ.தீ. அணி வீரர் குறித்து...

DIN

ஆஸி. அணிக்கு எதிராக மட்டும் அசத்தலாக பந்துவீசும் மே.இ.தீ. அணி வீரர் ஷமர் ஜோசப் பேசுபொருளாக மாறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியும் ஆஸி. அணியும் பாரபடோஸ் திடலில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் ஆஸி. 180-க்கு ஆல் அவுட்டானது.

இதில் ஆஸி. அணியின் டாப் ஆர்டர் பேட்டர்களை குறிவைத்து வீழ்த்தியுள்ளார் ஷமர் ஜோசப்.

டார் ஆர்டர் சாம் கான்ஸ்டாஸ், கவாஜா, கேமரூன் கிரீனை வீழ்த்தினார். அடுத்து மிடில் ஆடர் பியூ வெப்ஸ்டரையும் வீழ்த்தி அசத்தினார்.

டிராவிஸ் ஹெட் விக்கெட்டும் நடுவர் தீர்ப்பினால் தவறியதால் 4 விக்கெட்டுடன் முதல் இன்னிங்ஸை முடித்தார்.

ஆஸி. அணிக்கு எதிராக மட்டுமே இதுவரை 5 இன்னிங்ஸ்களில் 17 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

மற்ற அணிகளுக்கு எதிராக 11 இன்னிங்ஸில் 16 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆஸி. அணிக்கு எதிராக அப்படி என்ன வன்மமோ என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

ஏற்கெனவே, ஆஸி. மண்ணில் ஒரு இன்னிங்ஸில் ஷமர் ஜோசப் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியதும் குறிப்பிடத்தக்கது.

முதல்நாள் முடிவில் மே.இ.தீ. அணி 57/4 ரன்கள் எடுத்துள்ளது. 25 வயதாகும் ஷமர் ஜோசப் 8 போட்டிகளில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Summary

Shamar Joseph is built different while playing against Australia, picking up 17 wickets at an average of 15.94 in Tests! insane record against mighty aussies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யு19 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்க அணி 118 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

அரிது... அரிது...

மகளிர் ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை வென்ற பார்சிலோனா..! 20-1 என ஆதிக்கம்!

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை!

தகவல்களை மட்டுமல்ல; உணர்வுகளையும்...

SCROLL FOR NEXT