கிரிக்கெட்

டி20: இந்தியா அதிரடி வெற்றி மந்தனா முதல் சதம்

இங்கிலாந்துக்கு எதிரான மகளிா் டி20 கிரிக்கெட் தொடா் முதல் ஆட்டத்தில் இந்தியா 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Din

இங்கிலாந்துக்கு எதிரான மகளிா் டி20 கிரிக்கெட் தொடா் முதல் ஆட்டத்தில் இந்தியா 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் தொடரில் முதல் ஆட்டம் நாட்டிங்ஹாமில் சனிக்கிழமை நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 210/5 ரன்களைக் குவித்தது. தொடக்க பேட்டரும், கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா 3 சிக்ஸா், 15 பவுண்டரியுடன் 62 பந்துகளில் 112 ரன்களை விளாசினாா். அவருக்கு துணையாக ஹா்லின் தியோல் 43 ரன்களை சோ்த்தாா்.

இங்கிலாந்து தரப்பில் லாரென்பெல் 3-27 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

இங்கிலாந்து 113/10 தோல்வி:

216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியால் இந்தியாவின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல்

14.5 ஓவா்களிலேயே 113/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் நடாலி ஷிவா் 66 ரன்களை எடுத்தாா். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினா். பௌலிங்கில் இந்திய தரப்பில் ஸ்ரீ சரணி 4-12 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை 97 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.

ஸ்மிருதி மந்தனா முதல் டி20 சதத்தைப் பதிவு செய்தாா். ஸ்ரீ சரணி அறிமுக ஆட்டத்திலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது வீராங்கனை என்ற சிறப்பை பெற்றாா்.

சிவந்த மேனி... ஜன்னத் ஜுபைர்!

மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக்கொள்... அண்ணா வழியில் விஜய்!செய்திகள்: சில வரிகளில் 30.7.25 |Vijay

அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாதது ஏன்? முதல்வர் பதில் சொல்லட்டும்! -இபிஎஸ் | Eps | Mkstalin

கிராண்ட்மாஸ்டர் திவ்யாவுக்கு உற்சாக வரவேற்பு! தாயகம் திரும்பியதும் அவர் சொன்ன விஷயம்!

பண்டையகால இந்தியாவின் மருத்துவம், உளவியல், யோகா!| Ancient India | IndianMedicine | Yoga

SCROLL FOR NEXT