டிராவிஸ் ஹெட் பந்தை அடிக்கும் காட்சி...  படம்: ஏபி
கிரிக்கெட்

விண்வெளி நாயகன்: வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய டிராவிஸ் ஹெட்!

ஆஸி. வீரர் டிராவிஸ் ஹெட் நிகழ்த்திய சாதனை குறித்து...

DIN

ஆஸி. வீரர் டிராவிஸ் ஹெட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஆஸி. அணி கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோற்றது. தற்போது, மே.இ.தீ. அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

பார்படாஸில் தொடங்கிய தொடரில் முதல் போட்டியில் ஆஸி. அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2-ஆவது இன்னிங்ஸில் ஹேசில்வுட்டின் 5 விக்கெட் எடுத்தது வெற்றிக்கு வித்திட்டது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 59, 2-ஆவது இன்னிங்ஸில் 61 என அசத்திய டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருது வென்றவர்களில் முதலிடத்தில் உள்ள டிராவிஸ் ஹெட் 10 முறை என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

ஆட்ட நாயகன் விருது வென்ற டிராவிஸ் ஹெட்.

50 போட்டிகளில் டிராவிஸ் ஹெட் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 2-ஆம் இடத்தில் ஜோ ரூட் 5 முறை 65 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

டபிள்யூடிசி போட்டிகளில் ஆட்ட நாயகன் வென்றவர்கள்

1. டிராவிஸ் ஹெட் - 10 முறை

2. ஜோ ரூட் - 5 முறை

3. பென் ஸ்டோக்ஸ் - 5 முறை

Travis Head became the first-ever player to win 10 PoTM awards in World Test Championship.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-வது டெஸ்ட்: ஜடேஜா அசத்தல்; மே.இ.தீவுகள் நிதான ஆட்டம்!

துவாரகாதீஷ் கோயிலில் குடியரசுத் தலைவர் முர்மு தரிசனம்

இன்பமே... ரகுல் ப்ரீத் சிங்!

இத்தனை கணவர்களா? கவனம் ஈர்க்கும் நிகிலா விமலின் பெண்ணு கேஸ் டீசர்!

‘கூட்ட அறிவியல்’ கொஞ்சமாவது கற்கனும்!

SCROLL FOR NEXT