இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றதற்கு பிசிசிஐ விடியோ வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு இதே தேதியில் இந்திய ஆடவர் அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை வென்றது.
சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு ஐசிசி கோப்பை கிடைத்த மகிழ்ச்சியில் இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள்.
ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி இந்தக் கோப்பையை வென்றது.
இந்தப் போட்டியில் 30 பந்துகளுக்கு 30 ரன்கள் தேவையானதாக இருந்தது. தென்னாப்பிரிக்க அணிக்கு எளிதான வெற்றியாகவே இருந்தது.
இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் பும்ரா, ஹார்திக் பாண்டியாவின் சிறப்பான செயல்பாடுகளால் கோப்பை வென்றது.
குறிப்பாக பாண்டியா ஓவரில் சூர்யகுமார் யாதவ் எல்லைக் கோட்டுக்கு அருகில் கேட்ச் பிடித்ததை யாருமே மறக்க மாட்டார்கள்.
பிசிசிஐ இந்த கேட்ச்சுடன் தொடங்கும் காட்சியுடன் விடியோ வெளியிட்டு ஜூன் 29, 2024 ஞாபமிருக்கிறதா எனப் பதிவிட்டுள்ளது. இந்த விடியோ சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.