படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா; வெளியேறியது ஆப்கானிஸ்தான்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா முன்னேறியது.

DIN

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா முன்னேறியது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தன. குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், குருப் பி பிரிவில் ஆஸ்திரேலிய அணியும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தன. இந்த நிலையில், தற்போது 4-வது மற்றும் கடைசி அணியாக தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும் என தெரிந்திருந்தபோதிலும், தற்போது தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இன்றையப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு இருந்த மிக மிக அரிதான வாய்ப்பை அந்த அணி இழந்தது. இதன் மூலம், தென்னாப்பிரிக்க அணி 4-வது மற்றும் கடைசி அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்யும் பட்சத்தில், தென்னாப்பிரிக்காவை இங்கிலாந்து அணி, குறைந்தது 207 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்ற சூழல் இருந்தது.

ஆனால், இன்றையப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், ஆப்கானிஸ்தானுக்கு அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கு இருந்த மிக மிக அரிதான வாய்ப்பு பறிபோனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விஐடியில் ஆடை வடிவமைப்பு போட்டிகள்

பிணைத்தொகை அடிப்படையில் ஜாமீன் வழங்க வேண்டாம்: உயா்நீதிமன்றங்கள், விசாரணை நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

வாடகைத்தாய் நியமிக்கும் நடைமுறைகளில் தம்பதிகளுக்கு விழிப்புணா்வு கட்டாயம் உயா்நீதிமன்றம்

நாகா்கோவிலில் இலவச சித்த மருத்துவ முகாம்

கடற்கரைக் கிராமங்களை பாதுகாக்க சிறப்பு நிதி: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT