ஷேன் வாட்சன்.  படம்: எக்ஸ் / ஆஸி. மாஸ்டர்ஸ்
கிரிக்கெட்

ஷேன் வாட்சனை தடை செய்ய வேண்டும்..! ரசிகரின் பதிவுக்கு காரணம் என்ன தெரியுமா?

மாஸ்டர்ஸ் லீக்கில் இருந்து ஷேன் வாட்சனை தடை செய்ய வேண்டுமென பலரும் நினைக்கிறார்கள்.

DIN

மாஸ்டர்ஸ் லீக்கில் இருந்து ஷேன் வாட்சனை தடை செய்ய வேண்டுமென பலரும் நினைக்கிறார்கள். அதை ஒரு ரசிகர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மார்ச்.1 முதல் மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, ஆஸி., இலங்கை, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மே.இ.தீ. ஆகிய அணிகள் விளையாடுகின்றன.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களுக்காக இந்த மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் இருக்கிறது.

இதில் 11ஆவது போட்டியாக நேற்றைய போட்டியில் ஆஸி. மாஸ்டர்ஸ், தெ.ஆ. மாஸ்டர்ஸ் அணி மோதின.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸி. மாஸ்டர்ஸ் 260/1 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தெ.ஆ. மாஸ்டர்ஸ் அணி 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆஸி. சார்பில் சதமடித்த (122) கேப்டன் ஷேன் வாட்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இது இவரது 3ஆவது சதமாகும்.

4 போட்டிகளில் 3 சதங்கள் அடித்துள்ள வாட்சனை மாஸ்டர்ஸ் லீக்கில் இருந்து தடை செய்ய வேண்டுமென ரசிகர் எக்ஸில் பதிவிட்டுள்ளார்.

43 வயதிலும் இன்னும் அதேமாதிரி அதிரடியாக விளையாடி வருகிறார் ஷேன் வாட்சன்.

புள்ளிப்பட்டியலில் ஆஸி. அணி 4 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே ஊழியா் வீட்டில் 10 பவுன் தங்க நகை திருட்டு

அணு ஆயு​தம் என்​னும் அச்​சு​றுத்​தல்

இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!

திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக தொடா் மழை

ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு பிரதமா் புகழாரம்: சுதந்திரதின நாளுக்கு அவமதிப்பு! கேரள முதல்வா் பினராயி விஜயன்

SCROLL FOR NEXT