ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக உம்ரான் மாலிக் விலகியுள்ளார்.
ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது.
உம்ரான் மாலிக் விலகல், சேட்டன் சக்காரியா சேர்ப்பு
இன்னும் சில தினங்களில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய உம்ரான் மாலிக்குக்குப் பதிலாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேட்டன் சக்காரியா மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்காக சேட்டன் சக்காரியா ஒருநாள் போட்டி ஒன்றிலும், இரண்டு டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதுவரை 19 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சேட்டன் சக்காரியா, 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இதையும் படிக்க: கடந்த சீசனில் கேப்டன், இந்த முறை துணைக் கேப்டன்; தில்லி கேபிடல்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இடதுகை மிதவேகப் பந்துவீச்சாளரான சேட்டன் சக்காரியா ரூ.75 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.