ஷகிப் அல் ஹசன் (கோப்புப்படம்) 
கிரிக்கெட்

ஷகிப் அல் ஹசன் பந்துவீச அனுமதி!

ஷகிப் அல் ஹசன் மீதான ஆட்சேபனைக்குரிய பந்துவீச்சு மறுஆய்வு செய்யப்பட்டு தடை நீக்கப்பட்டது.

DIN

முன்னாள் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் மீதான ஆட்சேபனைக்குரிய பந்துவீச்சு மறுஆய்வு செய்யப்பட்டு தடை நீக்கப்பட்டது.

டெஸ்ட், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ஷகிப் அல் ஹாசன் இனிமேல் ஒருநாள், உள்ளூர் டி20 போட்டிகளில் தடையில்லாமல் பந்துவீசலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆங்கில ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “ஆமாம், இந்தச் செய்தி உண்மைதான். மீண்டும் பந்துவீச தயார்” எனக் கூறியுள்ளார். ஆனால், இந்த ஆய்வை எங்கு எடுத்தது எனக் குறிப்பிட்டு ஷகிப் எதுவும் பேசவில்லை.

கடைசியாக 2024இல் கான்பூர் டெஸ்ட்டில் தனது ஓய்வை அறிவித்தார்.

டிசம்பரில் ஆட்சேபனைக்குரிய பந்துவீச்சு என கவுண்டி கிரிக்கெட் போட்டியில் கூறப்பட்டது.

37 வயதாகும் ஷகிப் இதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தேர்வாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஐபிஎல், பிஎஸ்எல் தொடரில் அவரை யாரும் ஏலத்தில் எடுக்காததால் அவர் அடுத்ததாக இலங்கைத் தொடரில் பங்கேற்க வாய்ப்பிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT