பாகிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக் தான் கிரிக்கெட் விளையாட முக்கிய காரணம் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி எனக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்காக 4 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள 30 வயதான உஸ்மான் தாரிக்கைப் பார்த்து இந்திய அணியினரே பயப்படுகிறார்கள்.
யார் இந்த உஸ்மான் தாரிக்?
உஸ்மான் தாரிக்கின் வித்தியாசமான பந்துவீச்சு பாணிதான் அவரை முதன்முதலில் கவனிக்க வைத்தது. ஓடிவந்து சற்று நின்று ரவி அஸ்வின் போல் பந்துவீசுவதால், பேட்டர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.
இரண்டு முறை அவரது பந்துவீச்சு மீது புகார் தெரிவிக்கப்பட்டு ஐசிசியின் மூலம் சரிபார்க்கப்பட்டது.
ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனும் அவரது பந்துவீச்சு பாணியைக் கிண்டல் செய்து மன்னிப்பு கேட்டார்.
அவரது வித்தியாசமான பந்துவீச்சுக்குக் காரணம் அவருக்கு முழங்கையில் இரண்டு முட்டிகள் இருக்கும். அது மிகவும் சிலருக்குத்தான் அப்படி இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உஸ்மான் தாரிக் வாழ்க்கையை மாற்றிய எம்.எஸ்.தோனி!
ஏஎஃப்பிக்கு உஸ்மான் தாரிக் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கிரிக்கெட்டில் எனது பெயர் இருக்க வேண்டுமென நான் நினைத்ததில்லை. ஆனால், ஒரு நாள் எம்.எஸ்.தோனியின் திரைப்படத்தைப் பார்த்தேன்.
என்னாலும் அவரைப் போலவே கிரிக்கெட்டராக மாற முடியும் என்ற எண்ணத்தைக் கொடுத்தது.
எனது பயிற்சியாளர் நான் பாகிஸ்தான் அணியில் தேர்வாகிவிட்டேன் எனக் கூறினார். நான் எனது திருமண வேலைகளில் பிஸியாக இருந்ததால், அது ஏதோ பிராங்க் செய்கிறார் என நினைத்தேன்.
பின்னர்தான் அது உண்மை என்று தெரியவந்தது. எனது மனைவி எனக்கு அதிர்ஷடத்தை கொண்டுவந்துள்ளார்.
சேல்ஸ்மேன் - ஆட்ட நாயகன்
துபையில் சேல்ஸ்மேனாக (விற்பனையாளர்) இருந்த உஸ்மான் தாரிக் கரீபியன் பிரீமியர் லீக்கில் 20 விக்கெட்டுகள் எடுத்து கவனம் பெற்றார்.
பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஸமான் முன்னாள் வீரர் வஜதுல்லா வஸ்தி என்பவரிடம் பயிற்சி அளிக்க பரிந்துரைத்துள்ளார்.
உஸ்மான் தாரிக்கின் தனித்துவமான பந்துவீச்சு அவருக்குப் பிடிக்கவே அவருக்கு பயிற்சி அளிக்க வஜதுல்லா வஸ்தி ஒப்புக்கொண்டுள்ளார்.
மெதுவாக பந்துவீசிக்கொண்டிருந்த உஸ்மான் தாரிக்கை வேகமாக வீச வேண்டுமென வஜதுல்லா வஸ்தி டிப்ஸ் கொடுக்கவே மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளராக உஸ்மான் தாரிக் உருமாறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.