படம் | மேற்கிந்தியத் தீவுகள் (எக்ஸ்)
கிரிக்கெட்

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மே.இ.தீவுகள்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

DIN

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதற்கு முன்பாக, கடந்த 2013-2014 ஆம் ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி டெஸ்ட் தொடருக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன் பின், 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவுக்கு அந்த அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்தவுடன், தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தில்லியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி குவாஹாட்டியிலும் நடைபெறவுள்ளது. குவாஹாட்டியில் முதல் முறையாக டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT