அஜிங்க்யா ரஹானே படம் | ஐபிஎல்
கிரிக்கெட்

ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தது தெரியாது; அஜிங்க்யா ரஹானே அதிர்ச்சி!

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தது தனக்குத் தெரியாது என இந்திய அணி வீரர் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

DIN

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தது தனக்குத் தெரியாது என இந்திய அணி வீரர் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (மே 7) அறிவித்தார். அவரது திடீர் அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி அடுத்த மாதம் விளையாடவுள்ள நிலையில், ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

அஜிங்க்யா ரஹானே அதிர்ச்சி

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தது தனக்குத் தெரியாது எனவும், அவரது முடிவு அதிர்ச்சியளிப்பதாக இருப்பதாகவும் இந்திய அணி வீரர் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான முக்கியமான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து ஈடன் கார்டன்ஸ் திடலில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடியது. சென்னைக்கு எதிரான போட்டியில் விளையாடியதால் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் ஓய்வு முடிவை அஜிங்க்யா ரஹானே அறிந்திருக்கவில்லை.

ரோஹித் சர்மா

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டி நிறைவடைந்த பிறகு ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்து அவர் பேசியதாவது: டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுவிட்டாரா? அவர் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் ஓய்வை அறிவித்தது எனக்குத் தெரியாது. அவரது ஓய்வு முடிவு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரது எதிர்கால பயணத்துக்கு எனது வாழ்த்துகள்.

பேட்ஸ்மேனாக டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். 5-வது அல்லது 6-வது வீரராக களமிறங்கி டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய அவர், அணியின் தொடக்க ஆட்டக்காரராக மாறினார். தொடக்க ஆட்டக்காரராக விளையாட அவரை மாற்றிக்கொண்டது மிகவும் அற்புதமாக இருந்தது. பந்துவீச்சாளர்களுக்கு சவாலளிக்கும் விதமாக அவர் சிறப்பாக விளையாடக் கூடியவர் என்றார்.

38 வயதாகும் ரோஹித் சர்மா கடந்த 2013 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இதுவரை இந்திய அணிக்காக  67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 4301 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT