ஸ்மிருதி மந்தனா கோப்புப் படம்
கிரிக்கெட்

இந்திய ராணுவத்துடன் உறுதியாக துணைநிற்கிறோம்: ஸ்மிருதி மந்தனா

இந்திய ராணுவத்துடன் உறுதியாக துணை நிற்பதாக இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

DIN

இந்திய ராணுவத்துடன் உறுதியாக துணை நிற்பதாக இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் துல்லியத் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இந்தத் தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் அதிகரித்தது.

இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடரும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

உங்களுடன் துணைநிற்கிறோம்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் அதிகரித்து அசாதாரண சூழல் நிலவும் நிலையில், இந்திய ராணுவத்துடன் உறுதியாக துணை நிற்பதாக இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: நமது இந்திய ஆயுதப் படைகளின் தைரியம், தியாகம் மற்றும் ஈடுபாட்டுக்கு தலைவணங்குகிறேன். உங்களது வலிமை எங்களது சுதந்திரத்தைப் பாதுகாக்கிறது. நாங்கள் உங்களுடன் எப்போதும் உறுதியாக துணை நிற்கிறோம். வந்தே மாதரம் எனப் பதிவிட்டுள்ளார்.

ஸ்மிருதி மந்தனா தற்போது இலங்கையில் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT