முகப்பு
கிரிக்கெட்

முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: இந்திய மகளிர் பேட்டிங்!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மகளிரணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Updated On : 11 மே, 2025 at 5:16 AM
இலங்கை, இந்திய மகளிரணி கேப்டன்கள்.
பகிர்:

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று (மே 11) தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இந்தத் தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்துள்ளது.

பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா முறையே 23, 22 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். பிரதிகா ராவல் இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 4 போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.

4 புள்ளிகளுடன் இலங்கை அணி இரண்டாமிடம் பிடித்தது. ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்ற தென்னாப்பிரிக்க அணி தொடரிலிருந்து வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →