அசையாமல் நின்ற ஜானி பெயர்ஸ்டோ  படங்கள்: எக்ஸ் / ரோட்ஸே கவுண்டி சாம்பியன்ஷிப்.
கிரிக்கெட்

10 நொடிகள் அசையாமல் நின்ற இங்கிலாந்து வீரர்..! வைரலாகும் விடியோ!

இங்கிலாந்து வீரர் ஜானி பெயர்ஸ்டோ அசையாமல் நின்ற விடியோ வைரலாகி வருகிறது.

DIN

இங்கிலாந்து வீரர் ஜானி பெயர்ஸ்டோ 10 நொடிகள் அசையாமல் நின்ற விடியோ வைரலாகி வருகிறது.

35 வயதாகும் ஜானி பெயர்ஸ்டோ தற்போது கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் 1-இல் விளையாடி வருகிறார்.

இந்தத் தொடரில் யார்க்‌ஷ்ரி அணிக்காக கேப்டன் பொறுப்பிலிருக்கும் ஜானி பெயர்ஸ்டோ ஒரு பந்தினை அடித்துவிட்டு அசையாமல் 9.51 நொடிகள் நிற்பார்.

இரண்டு பந்துகளுக்கு தொடர்ச்சியாக இப்படி நிற்கும் விடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனை ரோட்ஸே கவுண்டி சாம்பியன்ஷிப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஏன் அப்படி நின்றார்?

முன்னதாக ஆஸி. உடனான டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்துவிட்டு கிரிஸில் காலை வைத்துவிட்டு நடந்து செல்வார். கீப்பர் பந்தினை பிடித்து ஸ்டம்பில் அடித்ததும் நடுவர் அவுட் கொடுப்பார்.

இது மிகப்பெரிய சர்ச்சையானது. விதியின்படி அது அவுட்டாக இருந்தாலும் பலரும் இதைக் கடுமையாக விமர்சித்தார்கள்.

ஜானி பெயர்ஸ்டோ இதனை ஒரு பாடமாக எடுத்துகொண்டு இப்படி செய்து வருகிறார்.

கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் மீம்ஸ்களாக குவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் பயணிகளை ஏமாற்றி பணம் பறிப்பு: போலி டிக்கெட் பரிசோதகா் கைது

ஹாத்வே நிகர லாபம் 46% சரிவு!

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6% ஆக உயர்த்தி கணிப்பு: ஐஎம்எஃப்

குடும்பத்தாரின் அன்பை சோதிக்க இறந்தது போல நடித்த விமானப் படை வீரர்!

சிங்கப்பூரிடம் தோல்வி! ஏஎஃப்சி ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா!

SCROLL FOR NEXT