ஜஸ்பிரித் பும்ரா (கோப்புப் படம்) படம் | ஐசிசி
கிரிக்கெட்

அடுத்த கேப்டனுக்கான எதிர்பார்ப்பு அதிகரிப்பு; பும்ராவுக்கு ஆதரவாக வேகப் பந்துவீச்சாளர்!

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

DIN

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அண்மையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்ததையடுத்து, அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

பும்ராவுக்கு இஷாந்த் சர்மா ஆதரவு

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்த ஜஸ்பிரித் பும்ராவே தனது முதல் தெரிவாக இருப்பார் என இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ரா முழு உடல்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்தக் கேப்டனாக நியமிக்கப்பட அவரே எனது முதல் தெரிவாக இருப்பார். தற்போது உள்ள வீரர்களில் அவருக்கு மட்டுமே அதிக அனுபவம் இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் அவரால் முழுமையாக விளையாட முடியாத பட்சத்தில், ஷுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்கலாம் என்றார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் பிரதான போட்டியாளர்களாக உள்ளனர். கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரும் இந்த போட்டியில் அடுத்தடுத்து இடங்களில் உள்ளனர்.

இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இளம் வீரர் ஷுப்மன் கில் நியமிக்கப்படலாம் என பலரும் தெரிவித்து வருகின்றனர். ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக நியமிப்பதற்கு அவரது உடல்தகுதி மற்றும் வேலைப்பளு ஆகியவை தடைகளாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

ஈரோடு ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா நாளை தொடக்கம்

சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து

பவானியில் வடிகால், கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை

ரயிலில் இருந்து தவறிவிழுந்த பயணியை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT