எம்பிஎல் டி20 போஸ்டர்.  படம்: எக்ஸ் / எம்பிஎல் டி20
கிரிக்கெட்

எம்பிஎல் டி20 லீக் போட்டிகள் நடைபெறும் இடம், தேதி மாற்றம்!

மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவிருந்த எம்பிஎல் டி20 லீக் இடம், தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

DIN

மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவிருந்த எம்பிஎல் டி20 லீக் தேதி, இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட்டுகள் பிரபலமாகி வரும் நிலையில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் டி20 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த லீக் போட்டிகளில் நன்றாக விளையாடிவர்கள் ஐபிஎல் போட்டிகளில் தேர்வாகி இந்திய அணிக்கும் தேர்வாகிறார்கள்.

கடந்தாண்டு ம.பி.யில் மத்தியப் பிரதேச டி20 லீக் (எம்பிஎல்) போட்டிகள் முதல்முறையாக நடைபெற்றன.

இந்த சீசனுக்கான எம்பிஎல் போட்டிகள் மே.27இல் தொடங்கவிருந்தது. ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டதால் இந்தப் போட்டிகள் ஜூன் 12ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.

பொதுவாக மே.25இல் ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்த பிறகு எம்பிஎல் போட்டிகள் மே.27இல் நடைபெறுவது வழக்கமாக இருந்தது.

தற்போது ஐபிஎல் போட்டிகள் போர்ப் பதற்றம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டதால் ஜூன் 3ஆம் தேதிதான் முடிவடைகின்றன.

எம்பிஎல் போட்டிகளின் தேதி மட்டும் மாறாமல் மழையின் காரணமாக இந்தூரில் இருந்து குவாலியருக்கு மாற்றப்பட்டுள்ளது.

கடந்த சீசனில் எம்பிஎல் லீக்கில் 5 அணிகள் மட்டுமே பங்கேற்றன. தற்போது, 7 அணிகளாக உயர்த்தப்பட்டுள்ளன.

இந்தப் போட்டிகள் மாற்றத்திற்கான அனைத்து உபகரணங்களும் ஏற்கனவே மாற்றப்பட்டதாக எம்பிஎல் சிஇஒ ரவி பாட்னகர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

ஜன நாயகனுக்காக காத்திருந்தேன்! பராசக்திக்கு வாழ்த்துகள்! அண்ணாமலை பேட்டி! | BJP

”விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறோமா?” பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் | TVK | BJP

திருவனந்தபுரம்: திருமண நாளிலேயே சாலை விபத்தில் இளைஞர் பலி

வெளிநாட்டு மாணவர்களுக்கும் இலவச கல்வி அளிக்கும் ஜெர்மனி பல்கலை.கள்!

SCROLL FOR NEXT