படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

முதல் ஒருநாள்: மே.இ.தீவுகளுக்கு எதிராக 400 ரன்கள் குவித்து இங்கிலாந்து அபாரம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 400 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 400 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி எட்ஜ்பேஸ்டானில் இன்று (மே 29) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் பேட் செய்தது.

இங்கிலாந்து அபாரம்; 401 ரன்கள் இலக்கு

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 400 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் ஜேக்கோப் பெத்தேல் அதிகபட்சமாக 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.

அவரைத் தொடர்ந்து, பென் டக்கெட் (60 ரன்கள்), கேப்டன் ஹாரி ப்ரூக் (58 ரன்கள்), ஜோ ரூட் (57 ரன்கள்), வில் ஜாக்ஸ் (39 ரன்கள்), ஜோஸ் பட்லர் (37 ரன்கள்) எடுத்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அல்சாரி ஜோசப் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

401 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT