ஷ்ரேயாஸ் ஐயர், கௌதம் கம்பீர். கோப்புப் படங்கள்.
கிரிக்கெட்

ஷ்ரேயாஸை டெஸ்ட் அணியில் தேர்வு செய்யாததில் எனக்கு பங்கில்லை: கம்பீர்

இங்கிலாந்து டெஸ்ட்டில் ஷ்ரேயாஸை தேர்வு செய்யாதது குறித்து கம்பீர் பேசியதாவது...

DIN

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஷ்ரேயாஸை தேர்வு செய்யாமல் இருக்க தான் காரணமில்லை என இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்துக்குச் சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்தத் தொடரில் இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மன் கில் தேர்வாகியுள்ளார்.

உள்ளூர் போட்டிகள் முதல் உலகக் கோப்பைகள் வரை சிறப்பாக விளையாடிவரும் ஷ்ரேயாஸ் ஐயரை பிசிசிஐ புறக்கணித்தே வருகிறது.

இந்நிலையில், இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கம்பீர் பேசியதாவது:

நான் தேர்வுக்குழுவில் இல்லை. இந்திய அணிக்கு நான் பயிற்சியாளர் மட்டுமே. பிசிசிஐ நாம் பல காரணங்களுக்காக விமர்சிக்கிறோம். ஆனால், ஐபிஎல் இறுதிப் போட்டியில் முப்படைத் தளபதிகளை அழைத்ததுக்கு விமர்சிப்பதை நம்பமுடியவில்லை.

இந்தியாவுக்காக சுயநலமில்லாமல் உழைக்கும் ராணுவத்துக்கு நாடு முழுவதும் இருந்தும் மரியாதை செலுத்த வேண்டும்.

அதனால், பிசிசிஐ எடுத்த இந்த முடிவினை நாம் பாராட்ட வேண்டும் என்றார்.

பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்படும் ஷ்ரேயாஸ் ஐயர் அந்த அணியை பல ஆண்டுகளுக்குப் பிறகு பிளே-ஆஃப்ஸில் கொண்டு சென்றுள்ளார்.

இன்றிரவு பஞ்சாப், ஆர்சிபி அணி குவாலிஃபயர் 1-இல் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வார ஓடிடி படங்கள்!

ரூ. 8,757 கோடி சம்பளம்! மெட்டாவை உதறித் தள்ளிய பெண்மணி!

குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் ஓபிஎஸ்! செய்திகள்: சில வரிகளில் 31.7.25 | BJP | OPS | Mkstalin

முதுநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT