மும்பை: மகளிர் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா சீரான இடைவெளியில் சரிந்த விக்கெட்டுகளைப் பறிகொடுத்து விளையாடி வருகிறது; ஆட்டம் பரபரப்பான கட்டத்தில் நகருகிறது!
ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வெல்லும் முனைப்பில் இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகள் ஆக்ரோஷமாக விளையாடி வருகின்றன. நவி மும்பையில் டி.ஒய். பாட்டீல் கிரிக்கெட் திடலில் தொடங்கியுள்ள இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியா பேட்டிங்கில் ஈடுபட்டுள்ளது.
அதில், தொடக்க வீராங்கனையான ஷஃபாலி வர்மா அரைசதம் கடந்தார். ஒருநாள் போட்டிகளில் இது அவரது 5-ஆவது அரைசதமாகும். ஸ்மிரிதி மந்தனா 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 104 ரன்களைச் சேர்த்து அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.
ஷஃபாலி வர்மா 87 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து அரையிறுதியில் கிரிக்கெட் உலகத்தையே திரும்பிக் பார்க்கச் செய்த ஆட்டநாயகி ஜெமிமா ரோட்ரிக்ஸ் 24 ரன்களில் பெவிலியனுக்கு திரும்பியதும் அரங்கத்தில் மயான அமைதி நிலவியது.
இந்த நிலையில், இந்தியா 45 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்களைத் திரட்டியுள்ளது. களத்தில் தீப்தி ஷர்மாவும் ரிச்சா கோஷும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.