மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
நவி மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டி.ஒய். பாட்டீல் திடலில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி முதல்முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்தது.
இந்த நிலையில், ஒவ்வொரு ஐசிசி தொடரின் முடிவிலும் போட்டி முழுவதும் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளை சேர்த்து ஐசிசியின் சிறந்த அணி வெளியிடப்படும். அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசியின் சிறந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் இந்தியாவைச் சேர்ந்த துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா உள்ளிட்ட மூன்று பேர் இடம்பெற்றுள்ளார். இந்தத் தொடரில் 571 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா ஒரு சதம், இரண்டு அரைசதங்களுடன் 434 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு சதத்துடன் 292 ரன்களும், தீப்தி சர்மா, 212 ரன்கள் குவித்து 22 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியா கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தனர். இறுதி ஆட்டத்தில் 58 ரன்கள் விளாசிய தீப்தி சர்மா, 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடர் நாயகி விருதையும் வென்றார்.
அதேபோன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெறும் 18 ரன்களை மட்டும் விடுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை அள்ளிய அலானா கிங்கும் இடம்பெற்றுள்ளார்.
லாரா வோல்வார்ட்(கேப்டன்) - தென்னாப்பிரிக்கா
ஸ்மிருதி மந்தனா - இந்தியா
ஜெமிமா ரோட்ரிக்ஸ் - இந்தியா
மரிஸன்னே காப் - தென்னாப்பிரிக்கா
அஷ்லே கார்ட்னர் - ஆஸ்திரேலியா
தீப்தி ஷர்மா- இந்தியா
அனபெல் சதர்லேண்ட் - ஆஸ்திரேலியா
நடின் டி கிளார்க் - ஆஸ்திரேலியா
சித்ரா நவாஸ் - பாகிஸ்தான்
அலனா கிங் - ஆஸ்திரேலியா
சோஃபி எக்லெஸ்டோன் - இங்கிலாந்து
நாட் ஷீவர் ப்ரண்ட் - இங்கிலாந்து (12-வது வீராங்கனை)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.